இங்கிலாந்து : இங்கிலாந்திற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இந்தியா ரன்கள் குவித்தாலும், மோசமான சாதனை ஒன்றை செய்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா மொத்தம் ( 2 இன்னிங்சிலும் சேர்த்து) 835 ரன்கள் குவித்த போதிலும் மோசமான சாதனையை படைத்துள்ளது.
இந்திய அணியின் மேல் வரிசையில் இருக்கும் 5 வீரர்கள் சேர்ந்து மொத்தம் 721 ரன்கள் அடித்த நிலையில், கீழ்வரிசையில் 6 வீரர்கள் சேர்ந்து வெறும் 65 ரன்கள் மட்டுமே அடித்துள்ளனர்.
இது ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியா பதிவு செய்த அதிகபட்ச (656) வித்தியாசமாகும்.