மும்பை: பி சி சி ஐ யின் புதிய கட்டுப்பாடுகள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கட்டுப்பாடுகளுக்கு விராட் கோலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளிநாடு மற்றும் உள்நாட்டுத் தொடர்களின் போது, குடும்பத்தினரை கிரிக்கெட் வீரர்கள் தங்களுடன் தங்க வைப்பதற்கு பிசிசிஐ கட்டுப்பாடுகள் விதித்தது.
இந்த கட்டுப்பாடுகள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் அதற்கு ஏற்படுத்தி உள்ள நிலையில் பலரும் தங்களின் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த வகையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளதாவது:
வீரர்களின் மனநிலையை சரியாக புரிந்து கொள்ளாமல் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோலி போட்டியில் தோல்வி கண்டால், சோர்ந்து போய் தனியாக உட்கார யாரும் விரும்பமாட்டார்கள் எனவும் கோலி தெரிவித்துள்ளார்.
தங்கள் குடும்பத்தினருடன் செல்லும் வீரர்கள் போட்டிகளில் சரியாக விளையாடுவதில்லை என்ற புகாரை அடுத்து பிசிசிஐ புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.