கராச்சி: 2 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக கிரேக் பிராத்வைட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று பாகிஸ்தான் சென்றடைந்தது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணி பாகிஸ்தானுக்குச் சென்றது. மேற்கிந்திய தீவுகள் அணி கடைசியாக 2006-ம் ஆண்டு பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடியது.
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இதே மைதானத்தில் ஜனவரி 25-ம் தேதி நடக்கிறது. அதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணி 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த போட்டி இஸ்லாமாபாத்தில் 10-ம் தேதி தொடங்குகிறது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இரு அணிகளும் தகுதி பெறவில்லை. இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இரு அணிகளுக்கும் இதுவே கடைசி தொடராகும். கிரேக் பிராத்வைட் (கேப்டன்), அலிக் அதானேஸ், கீசி கார்டி, ஜோசுவா டி சில்வா, ஜஸ்டின் கிரீவ்ஸ், கவேம் ஹாட்ஜ், டெவின் இம்லாச், அமீர் ஜங்கு, மைக்கேல் லூயிஸ், குடகேஷ் மோதி, ஆண்டர்சன் பிலிப், சின்டன் செக்ல் ரோச், சின்டன் கேமர் ரோச், ஜோமல் வாரிகன்.