By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    கேனரி தீவுகளை அடைந்த அகதிகள் படகு! இரண்டு பேர் உயிரிழப்பு – உயிருக்கு ஆபத்தான நிலையில் பச்சிளம் குழந்தை!
    1 Min Read
    நைஜீரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்! பதிலடி நடவடிக்கையில் 48 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் அறிவிப்பு!
    1 Min Read
    செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும்! கொடிய தானியங்கி ஆயுதங்களுக்கு தடை விதிக்க போப் லியோ வலியுறுத்தல்!
    1 Min Read
    சவுதி அரேபியாவை குறிவைத்த டிரோன் தாக்குதல் முறியடிப்பு! ரியாத் வானில் பதற்றம் – ஏவுகணையும் இடைமறிப்பு!
    1 Min Read
    ரஷ்யாவில் சுதந்திர ஊடகத்திற்கு மீண்டும் நெருக்கடி! 1993 முதல் இயங்கிய நோவாயா கசெட்டா பத்திரிகை மூடல்!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பூடானில் பனிப்பாறை ஏரி உடைந்து வெள்ள அபாயம்! மேற்கு வங்கத்தில் 12 ஆயிரம் பேர் வெளியேற்றம்
    1 Min Read
    ரஷ்யா – உக்ரைன் போர் உட்பட உலகப் பிரச்சினைகளுக்கு ராணுவத் தீர்வு உதவாது! ஜி20 மாநாட்டில் ஜெய்சங்கர் அதிரடி பேச்சு!
    2 Min Read
    ரூபாயின் மதிப்புக்கு ரிசர்வ் வங்கி கொடுத்த புத்துயிர்! டாலருக்கு நிகராக ரூ.94.95 ஆக உயர்வு – 8 மாதங்களில் சிறந்த மாதாந்திர செயல்பாடு!
    2 Min Read
    வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய மாற்றங்கள் வருமா? வங்கித்துறையைச் சீரமைக்க 5 பேர் கொண்ட உயர்மட்டக் குழு
    2 Min Read
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டாலும் மீண்டும் சேர்க்கலாம்! தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    லால்குடி நகரின் மையப்பகுதியில் 2 மதுக்கடைகள்! அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு
    2 Min Read
    திருச்சியில் 10 இடங்களில் வெள்ள அபாயம்! நிரந்தரத் தீர்வுக்கு மாஸ்டர் பிளான்
    2 Min Read
    சருமப் பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வு தரும் சந்தனம்..!
    1 Min Read
    தலை முடியில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும் பயனுள்ள குறிப்புகள்!!
    1 Min Read
    வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரம்! ஆந்திராவுக்கு புயல் அபாய எச்சரிக்கை
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஒடிசாவை புரட்டிப்போட்ட அர்னாப் புயல்! நிலச்சரிவில் 9 மாதக் குழந்தை உட்பட 3 பேர் பலி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > ஒடிசாவை புரட்டிப்போட்ட அர்னாப் புயல்! நிலச்சரிவில் 9 மாதக் குழந்தை உட்பட 3 பேர் பலி
இந்தியா

ஒடிசாவை புரட்டிப்போட்ட அர்னாப் புயல்! நிலச்சரிவில் 9 மாதக் குழந்தை உட்பட 3 பேர் பலி

Nagaraj
Last updated: October 31, 2026 5:05 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

அர்னாப் புயலைத் தொடர்ந்து பெய்த கனமழையால் ஒடிசா மாநிலத்தின் தெற்குப் பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி 9 மாதக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் ஆந்திரப் பிரதேசக் கடற்கரையைத் தாக்கிய பின்னர் உள்நோக்கி நகர்ந்தது. இதனால் ஆந்திராவுடன் ஒடிசாவின் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. குறிப்பாக கஞ்சம், கஜபதி, கந்தமால் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கந்தமால் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு தம்பதியும் அவர்களது 9 மாதக் குழந்தையும் சிக்கி உயிரிழந்தனர். மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையால் நிலச்சரிவுகள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனமழையால் ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. குறிப்பாக ருஷிகுல்யா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கஞ்சம் மாவட்டத்தின் பல பகுதிகளைப் பாதித்துள்ளது. சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளன. பல கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கஞ்சம் மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் பேரும், கஜபதி மாவட்டத்தில் 30 ஆயிரம் பேரும், கந்தமால் மாவட்டத்தில் 12 ஆயிரம் பேரும் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மாநிலம் முழுவதும் 313 மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 100க்கும் மேற்பட்ட குழுக்கள் கஞ்சம் மற்றும் கஜபதி மாவட்டங்களில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

முதல்வர் மோகன் சரண் மாஜி பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாகப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கஞ்சம் மாவட்டத்தில் நிவாரணப் பணிகளுக்காக கூடுதலாக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சேதமடைந்த சாலைகள், பாலங்கள், மின்சார இணைப்புகளை விரைவாகச் சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ உதவிகளை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, புயல் எச்சரிக்கை முன்கூட்டியே விடுக்கப்பட்டிருந்தும் தடுப்பு நடவடிக்கைகள் போதுமான அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. வரும் நவம்பர் 2ஆம் தேதி மத்தியக் குழு ஒடிசாவுக்கு வந்து சேதங்களை ஆய்வு செய்ய உள்ளது.

 

You Might Also Like

பூடானில் பனிப்பாறை ஏரி உடைந்து வெள்ள அபாயம்! மேற்கு வங்கத்தில் 12 ஆயிரம் பேர் வெளியேற்றம்

ரஷ்யா – உக்ரைன் போர் உட்பட உலகப் பிரச்சினைகளுக்கு ராணுவத் தீர்வு உதவாது! ஜி20 மாநாட்டில் ஜெய்சங்கர் அதிரடி பேச்சு!

ரூபாயின் மதிப்புக்கு ரிசர்வ் வங்கி கொடுத்த புத்துயிர்! டாலருக்கு நிகராக ரூ.94.95 ஆக உயர்வு – 8 மாதங்களில் சிறந்த மாதாந்திர செயல்பாடு!

வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய மாற்றங்கள் வருமா? வங்கித்துறையைச் சீரமைக்க 5 பேர் கொண்ட உயர்மட்டக் குழு

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டாலும் மீண்டும் சேர்க்கலாம்! தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!

TAGGED:#DisasterReliefCycloneArnabFloodRescueIndiaWeatherlandslideOdishaCycloneஅர்னாப் புயல்ஒடிசா புயல்கஞ்சம்நிலச்சரிவுமீட்புப் பணிகள்வெள்ளப்பெருக்கு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

இந்தியா

வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய மாற்றங்கள் வருமா? வங்கித்துறையைச் சீரமைக்க 5 பேர் கொண்ட உயர்மட்டக் குழு

By Nagaraj 2 Min Read

75 ஆண்டுகளில் இல்லாத குளிர்! கனமழையால் நடுங்கிய டெல்லி – அக்டோபர் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை 20.7 டிகிரியாகச் சரிவு

By Nagaraj
இந்தியா

ரூபாயின் மதிப்புக்கு ரிசர்வ் வங்கி கொடுத்த புத்துயிர்! டாலருக்கு நிகராக ரூ.94.95 ஆக உயர்வு – 8 மாதங்களில் சிறந்த மாதாந்திர செயல்பாடு!

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
இந்தியா

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டாலும் மீண்டும் சேர்க்கலாம்! தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!

வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) நிறைவடைந்துவிட்டதால், அதில் விடுபட்டவர்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க முடியாது என்று கருதக்கூடாது…

By Nagaraj
இந்தியா

பத்ரிநாத் யாத்திரையில் கோர விபத்து! மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது – விமானி உட்பட 6 பேர் பலி!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் புனிதத் தலத்திலிருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட தனியார் ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் விமானி உட்பட ஆறு…

By Nagaraj
இந்தியா

ஆந்திராவுக்கு ரூ.4,600 கோடி இழப்பு! அர்னாப் புயலால் 8,000 மின்கம்பங்கள் சாய்ந்தன – விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க முதல்வர் உறுதி!

அர்னாப் புயலின் தாக்கத்தால் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு ரூ.4,600 கோடியாக இருக்கும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு…

By Nagaraj
இந்தியா

ஒடிசாவை புரட்டிப்போட்ட அர்னாப் புயல்! நிலச்சரிவில் 9 மாதக் குழந்தை உட்பட 3 பேர் பலி

அர்னாப் புயலைத் தொடர்ந்து பெய்த கனமழையால் ஒடிசா மாநிலத்தின் தெற்குப் பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி 9 மாதக்…

By Nagaraj
இந்தியா

இந்தியாவின் சொந்த ஜிபிஎஸ் தொழில்நுட்பத்திற்கு புதிய பலம்! நள்ளிரவில் விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி 

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி-எப்18 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்.03 என்ற…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?