ஜெய்சால்மர்: அழிவின் விளிம்பில் உள்ள இந்தியாவின் அரிய பறவையான Great Indian Bustard எனப்படும் பெருங்கானாங்கோழியின் 2 ஆண் பறவைகள் ராஜஸ்தானின் பாலைவன தேசிய பூங்காவில் இயற்கைச் சூழலுக்குள் விடப்பட்டுள்ளன.
ஜெய்சால்மரில் உள்ள பாதுகாப்பு இனப்பெருக்க மையங்களில் வளர்க்கப்பட்ட இந்த பறவைகள் தற்போது மீண்டும் இயற்கை வாழ்விடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சுமார் ஒரு தசாப்தமாக நடைபெற்று வரும் பாதுகாப்பு இனப்பெருக்கத் திட்டத்தின் முக்கிய கட்டமாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. இயற்கை வாழ்விடத்தில் பறவைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை தொடர்ந்து கண்காணித்து, அதன் அடிப்படையில் மேலும் பறவைகளை விடுவிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவில் இந்த அரிய பறவையின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ள நிலையில், இயற்கை இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கான முக்கிய முயற்சியாக இது கருதப்படுகிறது.
