இடுக்கி மாவட்டம் புல்மேடு, பருந்துப்பாறை, பாஞ்சாலி மேடு பகுதிகளில் இருந்து 10,020 ஐயப்ப பக்தர்கள் நேற்று மகர ஜோதி தரிசனம் செய்ய சென்றனர். இந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புல்மேட்டில் இருந்து 6420, பாஞ்சாலி மேட்டில் இருந்து 1100, பருந்துபாறையில் இருந்து 2500 பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி சபரிமலை பொன்னம்பல மேட்டில் தெரியும் மகர ஜோதியை தரிசனம் செய்து புனிதம் பெற்றனர்.