ஒடிசா: பெர்காம்பூர் பல்கலைக்கழக துணை வேந்தரிடம் ரூ.14 லட்சம் டிஜிட்டல் முறையில் மோசடி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசாவில் டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.14 லட்சத்தை பெர்காம்பூர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாஞ்சலி இழந்துள்ளார். தன்னை அமலாக்கத்துறை அதிகாரி என்று தொலைப்பேசியில் தொடர்புகொண்ட இளைஞர் ஒருவர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களாக டிஜிட்டல் கைது மோசடி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் பல்வேறு வகையிலும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி நாளும் போதிய அளவு மக்கள் விழிப்புணர்வை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.