இந்தியாவில் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யப்பட்ட 18,000 போலி நிறுவனங்கள் மூலம் ரூ.25,000 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
மே 16 முதல் ஜூலை 15, 2023 வரை நடத்தப்பட்ட முதல் சிறப்பு விசாரணையில், 21,791 போலி நிறுவனங்கள் மூலம் ரூ.24,010 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, 2024 ஆகஸ்ட் 16 முதல் அக்டோபர் 30 வரை நடந்த இரண்டாம் கட்ட விசாரணையில், 73,000 நிறுவனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, 18,000 நிறுவனங்கள் போலியானவை என்பதை உறுதி செய்தனர்.
இவற்றின் மூலம் 24,550 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணையின் போது 70 கோடி ஜி.எஸ்.டி., தொகையை நிறுவனங்களே செலுத்தியுள்ளன.