உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் ஒரே நாளில் 3 கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா கடந்த 13ம் தேதி தொடங்கியது. வரும் 26ம் தேதி வரை 45 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதுவரை சுமார் 33 கோடி பேர் கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இந்நிலையில் கடந்த 1ம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 3 கோடி பக்தர்கள் புனித நீராடினர். வார இறுதி நாள் என்பதால் நேற்றும் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இதனால் உத்தரபிரதேச மாநிலமே விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம்தான் நிறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.