ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவமாக, தேங்காய்கள் ஏற்றி வந்த சரக்கு வாகனத்தில் 400 கிலோ கஞ்சா மறைத்து கடத்தப்பட்டு வந்தது போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ரிமோஜி பிலிம் சிட்டி அருகே சோதனை நடத்தப்பட்ட போது, ரச்சகொண்டா போலீசார் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இந்த பெரும் கடத்தலை வெளிச்சம் போட்டுள்ளனர்.

வாகனத்தில் தேங்காய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் நடுவே மூட்டைகள் மூட்டைகளாக கஞ்சா பொட்டலங்கள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன. இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்து உடனடியாக பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், ராஜஸ்தானைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், ஹைதராபாத்திலிருந்து இந்த போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாகவும், அதன் சந்தை மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் வழியாக முக்கிய சப்ளையர்களின் தொடர்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் மேலும் இரு முக்கிய சப்ளையர்களை தேடி வருகின்றனர். தெலங்கானாவில் போதைப்பொருள் கடத்தலை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.