சில்வாசா: தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் உள்ள சில்வாசா நகரில் நடைபெற்ற கூட்டத்தில் ரூ.2,587 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘உடல் பருமன்தான் பல நோய்களுக்கு மூல காரணம்.
சமீபத்திய அறிக்கையின்படி, 2050-ல் இந்தியாவில் கிட்டத்தட்ட 44 கோடி பேர் உடல் பருமனாக இருக்கலாம். இந்த ஆய்வு உண்மையாக இருந்தால், 2050-க்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு மூன்று பேரில் ஒருவர் உடல் பருமனாக இருக்கலாம். உடல் பருமன் மக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்த நிலையை போக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

சமையல் எண்ணெய் உபயோகத்தை 10 சதவிகிதம் குறைக்குமாறு மக்களிடம் நான் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளேன். நீங்கள் அனைவரும் 10 சதவீதம் குறைவாக எண்ணெய் வாங்க உறுதிமொழி எடுக்க வேண்டும். வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் உடல் பருமனை குறைக்க உதவும்,’ என்றார்.