மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் நடந்த மகா சிவராத்திரி விழாவின் போது மத்திய இணை அமைச்சரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்திய இணை அமைச்சர் ரக்ஷாவின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். மகாராஷ்டிராவில் நடந்த சிவராத்திரி விழாவின் போது இச்சம்பவம் நடந்தது.
ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் இக்குற்றத்தில் ஈடுபட்டதாகவும், அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் பட்னவிஸ் உறுதியளித்துள்ளார். அரசியல் ரீதியாக இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது.
தற்போது ஒருவன் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்த விசாரணை மேலும் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.