மத்தியபிரதேசம்: ரயில் சக்கரம் நடுவில் அமர்ந்து பயணம்… மத்திய பிரதேசம் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் ரயிலின் சக்கரத்திற்கு நடுவில் அமர்ந்துகொண்டு 250 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளார். கடந்த 24 ம் தேதி டானாபூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
வழக்கமான சோதனையின் போது, S-4 கோச்சின் கீழ் ஒரு இளைஞர் படுத்திருப்பதை ரயில்வே ஊழியர்கள் கவனித்தனர். அப்போது அந்த இளைஞனிடம் ரயில்வே ஊழியர்கள் விசாரித்ததில், தன்னிடம் டிக்கெட்டுக்கு பணம் இல்லை, அதனால் தான் இப்படி பயணம் செய்தேன் என அந்த இளைஞர் கூறியுள்ளார்.
அந்த இளைஞனின் நடத்தை மற்றும் நடவடிக்கைகள் அவர் சில மனநலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.