டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத்சிங் படங்களை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபையில் ஆளுநர் உரையின் போது ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் முழக்கமிட்டனர். இதன் காரணமாக 21 எம்எல்ஏக்கள் 3 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் கடந்த 2 நாட்களாக டெல்லி சட்டசபை வளாகத்தில் போராட்டம் நடத்த முயன்றனர்.
ஆனால் அவர்கள் சட்டசபை வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று சட்டசபை வளாகத்திற்குள் எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி செல்ல முயன்றார். ஆனால் அவரது கார் சட்டசபை வளாகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டது. இதற்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து ஆதிஷி கூறியதாவது:-
அம்பேத்கர் புகைப்படம் மற்றும் பெயரால் பா.ஜ.க. ஜெய் பீம் கோஷம் எழுப்பினால் வெளியே அனுப்பப்படுகிறோம். ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் மோடி கோஷம் எழுப்பினால் வெளியேற்றப்படுவதில்லை. அம்பேத்கரை விட பிரதமர் மோடி பெரியவர் என்று பாஜகவினர் நினைக்கிறார்களா? என்றார்.