புதுடில்லி: ‘நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வோம்’ என, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அகிலேஷ் யாதவ் X சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் குறுகிய கால ராணுவ ஆள்சேர்ப்பு அக்னிபாத் திட்டத்தை 24 மணி நேரத்தில் ரத்து செய்வோம். மீண்டும் பழைய முறையிலேயே ஆட்சேர்ப்பு நடைபெறும்.இவ்வாறு அகிலேஷ் கூறினார்.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்கு மத்திய அரசு சலுகைகளை அறிவித்துள்ளது. அதே சமயம் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வோம் என்றார் அகிலேஷ். இது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.