கோவளம் : கடலில் மூழ்கி அமெரிக்க மூதாட்டி பலி… கோவளம் கடலில் மூழ்கி 75 வயது அமெரிக்க மூதாட்டி பலியானதாக போலீஸார் தெரிவித்தனர்.
விழிஞ்சம் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நண்பர்களுடன் விடுமுறைக்கு வந்திருந்த மூதாட்டி, குளித்தபோது ஆழமான பகுதியில் நீரில் இழுத்துச் செல்லப்பட்டடார்.
அவரால் நீந்தி கரைக்குத் திரும்ப முடியவில்லை. பிறகு அவர் தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் மருத்துவர்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
இதனிடையே அமெரிக்க பெண்ணை மீட்க முயன்ற ரஷிய நாட்டவர் முயற்சியின் போது காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக போலீஸார் மேலும் தெரிவித்தனர்.