தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, தனது 30 வது பிறந்த நாளையொட்டி, ஹனுமன் மந்திரத்தை கூறி ஜாம்நகரிலிருந்து துவாரகா கோயில் நோக்கி 140 கி.மீ பாதயாத்திரை மேற்கொண்டார். இந்த நடைப்பயணத்தின் போது Z பாதுகாப்பு மற்றும் உள்ளூர் காவல் துறையினரும் அவருக்கு தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்கினர்.
இந்த நடைபயணத்தின் 5வது நாளில், ஆனந்த் அம்பானி மமிடி பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒரு பெரிய வண்டியில் 250 கோழிகளை இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுவது குறித்த தகவல் அவருக்கு கிடைத்தது. இதை அறிந்த ஆனந்த் உடனே அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி, கோழிகளை கொண்டு செல்லும் வண்டி உரிமையாளரிடம் பேசியுள்ளார். அவர் வண்டியில் இருக்கும் அனைத்து கோழிகளையும் விடுவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த செயலுக்கு அடுத்து, ஆனந்த் அம்பானி தனது ஊழியர்களிடம் எல்லா கோழிகளுக்கும் உரிய பணத்தை இரண்டு மடங்காக கொடுத்து அவற்றை மீட்கும்படி கூறியுள்ளார். மீட்ட கோழிகளை வன உயிரின புணர்வு மையமான வந்தாராவுக்கு அனுப்பி வைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மையம் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இந்திய அரசின் பிராணி மித்ரா என்ற தேசிய விருதை பெற்றது.
ஆனந்த் அம்பானியின் இந்த உதவிக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் சிலர், உயிரினங்களை பாதுகாப்பது சரியானது என்றாலும், இறைச்சிக்காக உள்ள உயிரினங்களை தடுத்து நிறுத்துவது, குறைந்த விலையில் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவிடாமல் செய்வது பற்றி கேள்வி எழுப்புகின்றனர். அவர்கள், ஆனந்த் அம்பானி போன்றவர்களுக்கு அதிக விலையில் உணவுகள் வாங்கும் சாத்தியமுள்ளதென, மற்றவர்களுக்கு உணவு தேவை என்பது எப்படி கவனிக்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றனர்.