ஆந்திரப்பிரதேசம்: வீட்டிலிருந்து வேலை பார்க்கலாம்… இது பெண்களுக்காக ஆந்திரப்பிரதேசத்தில் தான் இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளதாம்.
ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில், பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க ‘வீட்டிலிருந்து வேலை’ பார்க்கும் முறையை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:,
“ஆந்திரப் பிரதேச ஐடி & ஜிசிசி கொள்கை 4.0 ஐப் பயன்படுத்தி, நகரங்களில் ஐடி அலுவலக இடங்களை உருவாக்குவதை மாநிலம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி நெகிழ்வான தொலைதூர வேலை விருப்பங்களை ஊக்குவிக்கிறது மற்றும் அடிமட்டத்தில் வேலைவாய்ப்பை ஆதரிக்கிறது” என தெரிவித்துள்ளார்.