திருமலை: தெலுங்கானா மாநிலம், ஜனகாம் மாவட்டத்தில் உள்ள கொன்னேவ கிராமத்தைச் சேர்ந்தவர் புஸ்ஸா கிருஷ்ணா. இவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ரசிகர். டிரம்பிற்கு இந்தியா மற்றும் தெலுங்கானா என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால், அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக, 2019-ம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது, கிருஷ்ணா தனது வீட்டில் டொனால்டு டிரம்பிற்கு கோவில் கட்டினார்.
இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கிருஷ்ணா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ஆனால், சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் மீண்டும் பதவியேற்றதால் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிருஷ்ணா மாளிகையில் உள்ள டொனால்டு டிரம்ப் சிலைக்கு நேற்று பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
அமெரிக்க அதிபரின் வெற்றியை டிரம்பிற்கு கோவில் கட்டி, கிருஷ்ணரின் நினைவையும் பக்தியையும் போற்றும் வகையில் கொண்டாடியதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.