திருவனந்தபுரம்: துபாயில் இருந்து கேரளா வந்த மலப்புரம் மாவட்டம் எடவண்ணா பகுதியை சேர்ந்த 38 வயது இளைஞருக்கு சமீபத்தில் அம்மை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், மேலும் ஒரு கேரள இளைஞருக்கு குரங்கம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து எர்ணாகுளம் வந்துள்ளார்.
அதன் பின்னர் காய்ச்சல் மற்றும் உடலில் சில தடிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த வாலிபர் குரங்கம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.