புதுடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல், பிப்ரவரி, 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:-
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிப்பேன். வேலையில்லாத் திண்டாட்டத்தைத் தீர்க்க எனது குழு விரிவான திட்டத்தைத் தயாரித்து வருகிறது. மக்கள் ஆதரவுடன், அடுத்த 5 ஆண்டுகளில் டெல்லியில் வேலையில்லாத் திண்டாட்டம் தீரும். பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்த 2 ஆண்டுகளில் 48 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 3 லட்சம் இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.