ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1917-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி முதல் ஒரு ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 1926-ல் ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. இதையடுத்து, 1940-ல் மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. நாடு சுதந்திரம் அடைந்த பின், 1994-ல் மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது.
ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, 2015-ல் மீண்டும் புழக்கத்துக்கு வந்தது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஆங்கிலேயர் காலத்தில் அச்சடிக்கப்பட்ட பழைய ஒரு ரூபாய் நோட்டுகள் ஆன்லைனில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. சுதந்திரத்துக்கு முன் ஒரு ரூபாய் நோட்டுகள் ஒரு சிலரிடம் மட்டுமே வெளியிடப்பட்டது.

இதனால் அந்த நோட்டுகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட இணையதளங்களில் ஆன்லைன் ஏலம் நடத்தப்படுகிறது. பழைய ஒரு ரூபாய் நோட்டுகள் ரூ.5 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கவும் விற்கவும் ரிசர்வ் வங்கி அனுமதிப்பதில்லை. இருப்பினும், சட்டவிரோத ஏலம் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. சட்டச் சிக்கல்கள் எழுந்தால், அவற்றை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஐஎம்எப் இந்தியாவின் நிதி அமைப்பு நெகிழ்ச்சியுடன் உள்ளது என ஐஎம்எப் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நிதி அமைப்பு, விரைவான பொருளாதார வளர்ச்சியால் உந்தப்பட்டு, மேலும் மீள்தன்மை மற்றும் பன்முகத்தன்மை கொண்டது. 2010-களின் உலகளாவிய மந்தநிலையிலிருந்து மீண்ட பிறகு 2020-ல் இந்திய நிதி அமைப்பு கோவிட் நெருக்கடியை எதிர்கொண்டது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் சந்தை நிதியுதவி வளர்ந்துள்ளது.
இதில் பொதுத்துறை நிதி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. பலவீனமான நிலைமைகள் இருந்தபோதிலும், பெரிய கடன் வழங்குநர்கள் சிறிய அதிர்ச்சிகளை எதிர்கொள்கின்றனர். வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடம் அதற்கான மூலதனம் போதுமானது. இருப்பினும், பல வங்கிகள், குறிப்பாக பொதுத்துறை வங்கிகள், இத்தகைய சூழ்நிலைகளில் கடன் வழங்குவதற்கு தங்கள் மூலதனத் தளத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு ஐஎம்எப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.