மாட்டிறைச்சி உண்பதற்கு தடை விதிப்பதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “அசாமில் உள்ள உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படும்.
அதேபோல், பொது இடங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் மாட்டிறைச்சி சமைத்து பரிமாற அனுமதிக்கப்படாது” என்றார். ஆன்மிக ஸ்தலங்களுக்கு அருகில் மாட்டிறைச்சி உண்பதற்கு முன்பு தடை விதிக்கப்பட்டதாகவும், தற்போது மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மாட்டிறைச்சி தடையை வரவேற்கிறேன் என காங்கிரஸ் கட்சிக்கு சவால் விடுத்த அசாம் மாநில அமைச்சர் பியூஷ் ஹசாரிகா, அதை வரவேற்காவிட்டால் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என எக்ஸ் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.