புதுடெல்லி: கடந்த ஐந்து நிதியாண்டுகளில் மட்டும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து பொதுத்துறை வங்கிகள் கிட்டத்தட்ட ரூ.8,500 கோடி அபராதமாக வசூலித்துள்ளன.
இது தொடர்பான கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நேற்று பார்லியில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனை தெரிவித்தார். வெவ்வேறு வங்கிகள் மற்றும் பல்வேறு வகையான கணக்குகளைப் பொறுத்து, இந்த அபராதத் தொகை மாறுபடும்.
நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, கடந்த 2020-21 நிதியாண்டிலிருந்து குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிப்பதை நிறுத்தியதால், அதற்குப் பிறகும் இந்தத் தொகை அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பல வங்கிகள் காலாண்டு சராசரி இருப்பை பராமரிக்காததற்காக அபராதம் விதிக்கின்றன. சில வங்கிகள் சராசரி மாதாந்திர இருப்பை பராமரிக்காததற்காக அபராதம் விதிக்கின்றன.