அசாம்: ஏடிஎம்களில் 24 மணி நேரமும் இது தேவையில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வங்கி ஏடிஎம்களில் 24 மணி நேரமும் காவலாளிகளை நிறுத்த அசாம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு விசாரணையில், “24 மணி நேரமும் காவலாளிகளை நிறுத்துவது சாத்தியமற்றது. அங்கீகரிக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம், ஏடிஎம்களில் தொடர் கண்காணிப்பில் ஈடுபடலாம்” என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.