பெங்களூரு: கர்நாடகாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. பெங்களூருவில் இரண்டாவது நாளாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் குளம் போல் தண்ணீர் நிரம்பியதால் வாகன ஓட்டிகள் திணறினர்.
குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்கு வசிக்கும் மக்கள் அவதியடைந்துள்ளனர். கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை முடிந்து தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. பெங்களூரு நகரில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்று இரண்டாவது நாளாக மழை பெய்தது. புத்தேனஹள்ளி, ஜரகனஹள்ளி, பீன்யா, செட்டிஹள்ளி, பானஸ்வாடி, மாருதி சேவா நகர், புலிகேசி நகர், ராமசாமி பாலயா, எஸ்.கே., கார்டன், பாரதி நகர், ஹலசுரு, ஜெயமஹால், சம்பங்கி ராம் நகர், சிவாஜி நகர், எச்.ஏ. எல்., விமான நிலையம், விஜினபுரா போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது.
எலஹங்கா பகுதியில் அதிகபட்சமாக 7.35 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. 3 அடி முதல் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஓகிலிபுரம் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் தேங்கியது.
அங்கும் 4 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் தத்தளித்தன. பைக், ஆட்டோக்களின் சைலன்சர்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் பைக்குகள், ஆட்டோக்கள் நடுரோட்டில் நிறுத்தப்பட்டன. ஏர்போர்ட் ரோட்டில் ஹெப்பால் மேம்பாலம் அருகே இணைப்பு சாலையில் தண்ணீர் தேங்கியதால் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஆம்புலன்சும் இருந்தது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெங்களூரு வாசிகள், எதிர்காலத்தில் மழையால் பிரச்னைகள் ஏற்படுமா என, கவலையடைந்துள்ளனர்.