பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணையை பெறுவதற்காக விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கடந்த பிப்ரவரியில் 19வது தவணை வெளியிடப்பட்ட நிலையில், இப்போது ரூ.2000 தொகை விரைவில் வங்கியில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதற்கு சில முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. முதலில், eKYC செயல்முறையை முடிக்காத விவசாயிகள் திட்ட பலனை பெற முடியாது. ஆதார் எண்ணை, மொபைல் எண்ணுடன் இணைத்து, pmkisan.gov.in-ல் இதனை செய்து முடிக்க வேண்டும்.

இதேபோல, நில சரிபார்ப்பு செய்தல் முக்கியமானது. சமீபத்திய நில அப்டேட் இல்லை என்றால் பணம் வராது. ஆதார், வங்கி கணக்கு, விவசாயி ஐடி ஆகியவை சரியாக இருந்தால்தான் தொகை கிடைக்கும். தகுதியற்ற பயனாளர்களுக்கு, அதாவது வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள், 10,000 ரூபாய்க்கும் அதிக ஓய்வூதியம் பெறுபவர்கள், நிறுவன நிலம் வைத்திருப்பவர்கள், பெரிய விவசாயிகள் உள்ளிட்டோர் பிஎம் கிசான் பணம் பெற முடியாது.
மேலும், திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகள் குறைந்தபட்சம் 2 ஹெக்டேர் நிலம் சாகுபடி செய்யக்கூடிய அளவில் வைத்திருக்க வேண்டும். பயனாளர்கள் “Beneficiary List” பகுதியில் தங்கள் விவரங்களை சரிபார்க்கலாம். பிஎம் கிசான் திட்டம் சிறு விவசாயிகளுக்கு மட்டும் நம்பிக்கையான ஆதரவாக உள்ளது. போலியான நபர்கள் திட்டத்தில் இடம்பெறாமல் இருக்க அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எனவே, நிபந்தனைகளை பூர்த்தி செய்தவர்கள் மட்டுமே 20வது தவணையை பெற முடியும்.