புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து, கருணை மதிப்பெண்களை ரத்து செய்து, நீட் மதிப்பெண் பட்டியலை, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகளை exams.nta.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான நீட் மே 5ஆம் தேதி நடைபெற்றது. 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக் கோரி வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட முழு முடிவையும் தேசிய ஜனநாயக கூட்டணி இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, ஜூலை 20ம் தேதி, நீட் தேர்வு முடிவுகளை மையங்கள் வாரியாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. கருணை மதிப்பெண்களை ரத்து செய்து நீட் மதிப்பெண் பட்டியலை தேசிய தேர்வு முகமை இன்று (ஜூலை 25) வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகளை exams.nta.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். வினா 19க்கான கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.