புதுடெல்லி: ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ஆகஸ்ட் 2019-ல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஜம்மு காஷ்மீர் ஒரு சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி ஜாகூர் அகமது பட் மற்றும் குர்ஷாத் அகமது மாலிக் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தனர்.
அவர்கள் அளித்த மனுவில், “ஜம்மு – காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என, கடந்த ஆண்டு, மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால், இதுவரை மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை.
மாநில அந்தஸ்து வழங்க, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 2 மாதங்களில் காஷ்மீர் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.