கர்நாடகா: சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்துவதில் கர்நாடக அரசு உறுதிப்பூண்டுள்ளது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளது. இந்த சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்துவதில் கர்நாடக மாநில அரசு உறுதிப்பூண்டுள்ளது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சித்தராமையா கூறுகைapy “என்னுடைய அரசின் நோக்கத்தை மக்கள் சந்தேகிக்க வேண்டாம். சாதிவாரி கணக்கெடுப்பு அறிவியல் ரீதியாக நடத்தப்பட்டுள்ளது. எங்களுடைய அரசு நிச்சயமாக அமல்படுத்தும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
எங்களுடைய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. வரும் நாட்களில் அமல்படுத்தப்படும்” என்றார்.
2015-ம் ஆண்டு முந்தைய சித்தராமையா தலைமையிலான அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கமிட்டி அமைத்தது. இந்த கமிட்டி பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் ஹெச். கந்தராஜு தலைமையில் அமைக்கப்ப்டது. சுமார் 169 கோடி ரூபாய் செலவில் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டது.
2020-ல் பாஜக அரசு ஜெயபிரகாஷ் ஹெக்டேவை தலைவரான நியமித்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ந்தேதி ஹெக்டே இறுதி அறிக்கையை சித்தராமையா அரசிடம் தாக்கல் செய்தார்.