பெங்களூரு: கர்நாடகாவில் நாளை முதல் அக்டோபர் 7 வரை மீண்டும் சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
2015-ம் ஆண்டு கர்நாடகாவில் நடத்தப்பட்ட சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை ஏற்கக்கூடாது என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன. அமைச்சரவையிலும் எதிர்ப்பு இருந்ததால் அதை ரத்து செய்துள்ளோம். மக்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக நிலையை மதிப்பிடுவதற்காக புதிய சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 7 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். இதற்காக, 60 கேள்விகள் தயாரிக்கப்பட்டு, அரசு ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரிப்பார்கள். இந்தப் பணியில் சுமார் 1.25 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள். இதற்காக ரூ. 420 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் இறுதிக்குள் சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பாஜக மற்றும் சில சாதி அமைப்புகள் அரசியல் செய்கின்றன. இருப்பினும், இதை ஏற்றுக்கொள்ள எந்தக் கட்சியும் இடமில்லை. இவ்வாறு சித்தராமையா கூறினார்.