அன்னமய்யா: நேற்று அன்னமய்யா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:- முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியின் போது ஆந்திராவின் எதிர்காலத்தை அழித்தது. அது மக்கள் நலத் திட்டங்களை சீர்குலைத்தது, நிதியை தவறாகக் கையாண்டது, நீர்ப்பாசனத் திட்டங்களைத் தடுத்தது.
ஆந்திரப் பிரதேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதே எங்கள் அரசின் நோக்கம். வறட்சியால் பாதிக்கப்பட்ட ராயலசீமாவை ‘ரத்தின சீமா’வாக மாற்றுவோம். பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். நீர்ப்பாசனம், முதலீடுகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பான பல்வேறு சீர்திருத்தங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.

ஆந்திரப் பிரதேசத்தை ராம ராஜ்ஜியமாக உருவாக்குவோம். தேவைப்பட்டால், மக்களின் ஆதரவுடன் மலைகளை நகர்த்துவேன் என்று அவர் கூறினார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பாஜக, தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஜன சேனா கட்சி அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 175 இடங்களில் போட்டியிட்டு 164 இடங்களில் வெற்றி பெற்றது.
இவற்றில், தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களில் போட்டியிட்டு 135 இடங்களில் வெற்றி பெற்றது. சந்திரபாபு நாயுடு முதலமைச்சராகவும், ஜன சேனா கட்சியின் நிறுவனர் பவன் கல்யாண் துணை முதலமைச்சராகவும் உள்ளனர்.