பெங்களூரு: நிதியுதவி வழங்குவதில் விதிகளை மீறியதாக துணை முதல்வர் சிவக்குமார் மீது ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் பெங்களூரு நகரின் வளர்ச்சிக்கு தனியாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிதியுதவியை தொகுதிவாரியாக விநியோகிக்க அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஜெயநகர் சட்டசபை தொகுதியை தவிர மற்ற தொகுதிகளுக்கு தலா ரூ.10 கோடி வழங்க மாநகராட்சி கமிஷனருக்கு துணை முதல்வர் சிவக்குமார் உத்தரவிட்டது சர்ச்சையை கிளப்பியது.
ஜெயநகர் தொகுதி பாஜக எம்எல்ஏ ராமமூர்த்தி அதிருப்தி தெரிவித்தார். சிவகுமாரின் செயலுக்கு பாஜக தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். எதிர்க்கட்சி தலைவர் அசோக் அவருக்கு பகிரங்கமாக கடிதம் எழுதி கண்டனம் தெரிவித்தார்.
இதனிடையே சிவக்குமார் மீது ஆளுநர் தவர்சந்த் கெலாட்டிடம் நேற்று வழக்கறிஞர் யோகேந்திரா எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். அந்த புகாரில், ‘பெங்களூரு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சிவக்குமார், பதவிப் பிரமாணம் செய்யும் போது, கட்சி பாகுபாடின்றி, அரசியல் சாசனத்துக்கு கட்டுப்படுவேன் என, உறுதிமொழி எடுத்தார். பதவிப் பிரமாணத்தை மீறியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, கோரிக்கை விடுத்தார்.