வாஷிம்: காங்கிரஸ் கட்சியை நகர்ப்புற நக்சல்கள் நடத்துகிறார்கள் என்று பிரதமர் மோடி கடுமையாக தாக்கியுள்ளார். மகாராஷ்டிராவில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி ஒரு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக நேற்று மகாராஷ்டிரா சென்றார்.
அங்கு வாஷிம் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொடர்பான பல்வேறு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், “ஆங்கிலேயர் ஆட்சியைப் போல் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோரை காங்கிரஸ் சமமாக நடத்தவில்லை.
இந்தியாவை ஒரே குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை செழுமைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய பஞ்சாரா சமூகத்தின் மீதான இழிவான மனப்பான்மை, சுயநலத்திற்காக ஏழைகளை சூறையாடிய காங்கிரஸுக்கு எவ்வளவு நெருக்கமானது என்பதை நாம் பார்க்கலாம் மக்களைப் பிளவுபடுத்தத் தெரிந்த நகர்ப்புற நக்சல் கும்பல் காங்கிரசை நடத்துகிறது.
“காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், விவசாயிகள் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களில் ஊழலுக்கு ஒதுக்கப்பட்ட பணம், மக்கள் அனைவரும் ஒன்றுபட்டால், காங்கிரசை தோற்கடிக்க முடியும்” என்றார் .