புனே : மராட்டியத்தில் ஒரே நாளில் 97 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று சமீப வாரங்களாக அதிகரித்து காணப்படுகிறது. இதில் மராட்டியத்தில் ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இவற்றில், புனே மாவட்டத்தில் 48 பேருக்கும், மும்பை நகரில் 34 பேருக்கும் மற்றும் தானேவில் 6 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், கடந்த ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,162 ஆக உயர்ந்து உள்ளது என மராட்டிய சுகாதார துறை தெரிவித்து உள்ளது.
மொத்தம் 14,565 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்த காலகட்டத்தில், 597 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன் கூடிய 16 பேர் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். எனினும், புதன்கிழமையில் இருந்து உயிரிழப்பு பற்றிய தகவல் எதுவும் வெளிவரவில்லை.
இதனால், பொது மக்கள் முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட விசயங்களை பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.