புதுடெல்லி: மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் காவலை ஜூலை 15ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுக் கொள்கை வழக்கை சி.பி.ஐ., அமலாக்க இயக்குனரகம் விசாரித்து வருகிறது. முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடந்து வருகிறது.
நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், இன்று (ஜூலை 07) வீடியோ கான்பரன்சிங் மூலம் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை ஜூலை 15ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி காவேரிபவேஜா உத்தரவிட்டார்.