2008 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த தஹாவூர் ராணா, லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடையவராக தெரிகிறார். பாகிஸ்தானில் பிறந்த ராணா தற்போது அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

இந்தியாவுக்கு அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. ஜனவரியில், உச்ச நீதிமன்றம் தஹாவூர் ராணாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது. அப்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினர். அந்த சந்திப்பின்போது, ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.
இந்த முடிவுக்குப் பின்னர், தஹாவூர் ராணா தனது கடைசி வாய்ப்பாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில், இந்தியாவுக்கு நாடு கடத்துதல் குறித்த உத்தரவுக்கு உடனடியாக தடைவிதிக்க கோரி மனு தாக்கல் செய்தார். மனுவில், “இந்தியாவில் எனக்கு சித்ரவதை செய்வர்” என்று கூறி, நாடு கடத்தப்படக்கூடாது என வாதிட்டார்.
ஆனால், இந்த மனுவும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் மூலம், தஹாவூர் ராணாவின் கடைசிப்படியான முயற்சி தோல்வியடைந்தது. தற்போது, விரைவில் தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவான் என்பது உறுதியாகியுள்ளது.