புதுடில்லி: பிரபல நகைச்சுவை நடிகருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகரும், தொலைகாட்சி தொகுப்பாளருமான கபில் சர்மாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை மிரட்டல் பாகிஸ்தானில் இருந்து மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது. முன்னதாக ராஜ்பால் யாதவ், சுகந்தா மிஸ்ரா மற்றும் ரெமோ டி சோசா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் தற்போது கபில் சர்மாவும் இணைந்துள்ளார். கொலை மிரட்டல் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை துவங்கி, மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைய தகவல்களின் படி கொலை மிரட்டல் மின்னஞ்சல் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.