புதுடெல்லி: கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ கேப்டன் அன்ஷுமன் சிங்கின் மனைவி ஸ்மிருதி சிங் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட நபர் மீது டெல்லி போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
கேப்டன் அன்ஷுமன் சிங் இந்திய ராணுவத்தின் 26வது பஞ்சாப் படைப்பிரிவின் சியாச்சின் பகுதியில் மருத்துவ அதிகாரியாக இருந்தார். கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி சியாச்சின் ஆயுதக் கிடங்கில் தீயில் சிக்கிய ராணுவ வீரர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த அவர் தீயில் சிக்கி உயிரிழந்தார்.
இதையடுத்து, உத்தரபிரதேச மாநிலத்தில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. பின்னர், கேப்டன் அன்ஷுமன் சிங்கின் தியாகத்தை பாராட்டி, அவரது மனைவி ஸ்மிருதி சிங்குக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, “கீர்த்தி சக்ரா” விருதை வழங்கினார். இந்நிலையில், கேப்டன் அன்ஷுமன் சிங்கின் தந்தையும், தாயும் ஊடகங்களுக்கு அறிக்கை அளித்தனர். இதையடுத்து, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஸ்மிருதி சிங் குறித்து மிகவும் தரக்குறைவான கருத்தை பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் டெல்லி போலீசில் புகார் அளித்திருந்தது. அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்து விரைவில் கைது செய்ய வேண்டும். மேலும் இது தொடர்பான விரிவான அறிக்கையை அடுத்த மூன்று நாட்களுக்குள் தேசிய மகளிர் ஆணையத்திற்கு டெல்லி காவல்துறை அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து டெல்லியை சேர்ந்த நபர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.