டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
முதுகுவலி காரணமாக கடந்த 11ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுமதிக்கப்பட்டார். நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் கீழ் உள்ள பழைய தனியார் வார்டில் அனுமதிக்கப்பட்ட ராஜ்நாத் சிங்கின் உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இது தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த 11ம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முதுகுவலி காரணமாக பழைய தனியார் வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை இன்று (ஜூலை 13) தெரிவித்துள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் செய்தித் துறை பொறுப்பாளர் ரீமா தத்தா கூறுகையில், “முதுகுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட ராஜ்நாத் சிங்கிற்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று மதியம் 2 மணிக்கு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.