இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழாவையொட்டி, மக்களவையில் இரண்டு நாள் விவாதம் நடைபெற்றது. இதன்பின், பல கட்சி தலைவர்களின் கருத்துகளுக்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு மணி நேரம் பேசினார். இதில் காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் மோடியை விமர்சனம் செய்வதை குறைக்க வேண்டாம் என்றும், நேரு, இந்திரா காந்தி பற்றி பேசுவதை விட்டுவிட்டு அவர் ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்து பேச வேண்டும் என்றார்.
மத்திய அரசின் தோல்விகள் மற்றும் சவால்களை மறைக்கவே முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி பற்றி பிரதமர் மோடி பேசுவதாக ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினார். மேலும், “பிரதமர் மோடி எத்தனை முறை அனைத்துக் கட்சிகளுடன் கூட்டங்களை நடத்தியுள்ளார்? எத்தனை முறை எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பேசியிருக்கிறார்?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது ஆட்சியின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகளை வெளிப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்து வருகிறது.