உத்தரப்பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா மிகப்பெரிய திரளாக நடந்து வருகிறது. ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சி பிப்ரவரி 26ஆம் தேதி முடிவடைய உள்ளது. திரிவேணி சங்கமத்தில் புனித நீராட, 15 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை மட்டும் 4.8 கோடி மக்கள் புனித நீராடியதால், பிரயாக்ராஜ் நகரத்தில் போக்குவரத்து மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், திரும்பும் பக்தர்கள் சிக்கலில் சிக்கியுள்ளனர்.
30 மணி நேரத்துக்கும் மேலாக மக்கள் நெரிசலில் தவித்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான பேருந்துகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிக்கி தவிக்கின்றனர். உணவு மற்றும் தங்கும் வசதி இல்லாமல், மக்கள் சாலையிலேயே தூங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முதியவர்கள், குழந்தைகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
பிரயாக்ராஜ் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை குறைக்க முயன்றாலும், நிலைமை சீராகவில்லை. பக்தர்கள் அவசர உதவி கோரியும், நகர முடக்கத்தைச் சமாளிக்க அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.