கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்ற தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோவில் குறித்த சர்ச்சை புதிய திருப்பம் பெற்றுள்ளது.
ஒரு மாதத்திற்கு மேலாக, கோவில் அருகே பெண்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக பொய்யான புகார் பரவியது. முன்னாள் கோவில் ஊழியரான நபர், முகமூடி அணிந்து கொண்டு யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து, நேத்ராவதி ஆற்றங்கரையில் சடலங்கள் புதைக்கப்பட்டதாகக் கூறினார்.

இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்த, அரசு விசாரணைக்கு SIT (தனிப்படை போலீசார்) அமைத்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. சில இடங்களில் தோண்டியபோதும், பல தசாப்தங்களுக்கு முன்பு புதைக்கப்பட்டதாக கருதப்படும் ஒரு ஆண் எலும்புத் துண்டு தவிர வேறு எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
👉 விசாரணையில், தமிழகத்தை சேர்ந்த சிலரின் தூண்டுதலால் தான் இவ்வாறு பொய்ப்புகார் அளித்ததாக அந்த நபர் ஒப்புக்கொண்டதாக தகவல்.
👉 இன்று (ஆகஸ்ட் 23) SIT போலீசார் அந்த முகமூடி நபரை கைது செய்தனர்.
👉 அவருக்கு, தமிழக திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலுடன் தொடர்பு இருப்பதாக பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி குற்றஞ்சாட்டியிருந்தார். இதன் பின்னணியில் அரசியல் சதி சாத்தியம் குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது.