புதுடெல்லி: ஆண்டுக்கு 300 நாள்கள் டிபனுக்கு மக்கானாவை தான் சாப்பிடுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்கானா என்பது அல்லி மலரின் விதைகள் ஆகும். வட இந்திய மக்கள் இதனை அதிகளவில் சாப்பிடுகின்றனர். ஊட்டச்சத்து மிக்க இந்த உணவின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பட்ஜெட்டில் மக்கானா வாரியம் அமைப்பது குறித்து அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தினமும் காலையில் அதைதான் உட்கொள்வதாக பிரதமர் மோடியே தற்போது பேசி இருக்கிறார்.
ஊட்டச்சத்து மிக்க இந்த உணவு தற்போது மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.