புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் 1656-ல் கட்டப்பட்ட ஜமா மஸ்ஜித் உள்ளது. அங்கு வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இமாம் சையது அகமது புகாரி கூறியதாவது:- சில சமூக விரோதிகள் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். நாட்டின் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து வருகின்றனர்.
இந்தப் பிரச்னைக்கு நீங்கள் (பிரதமர் நரேந்திர மோடி) தீர்வு காண வேண்டும். முஸ்லிம்களிடம் பேசுங்கள். அவர்களின் இதயங்களைக் கேளுங்கள். அவர்களின் இதயங்களில் நீங்கள் ஒரு இடத்தைப் பெற வேண்டும். இந்து-முஸ்லிம், கோவில்-மசூதி பிரச்சினை இன்னும் எவ்வளவு காலம் தொடரும்? இன்னும் எத்தனை காலம் இப்படியே தொடரும்?
இந்து, முஸ்லிம் சமயத் தலைவர்களை அழைத்து அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு இமாம் சையத் அஹ்மத் புகாரி கூறினார்.