பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக மூடா ஊழல் எழுந்துள்ளது. இதையடுத்து முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த ஆளுநர் தாவர் சந்த் அனுமதி அளித்தார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் மைசூரில் உள்ள மூடா அலுவலகத்தில் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமலாக்கத்துறையினர் நேற்றும் சோதனையை தொடர்ந்தனர்.
முடா அலுவலகத்துக்கு காலை 10 மணிக்கு வந்த அதிகாரிகள் இரவு வரை சோதனை செய்தனர். மூடா கமிஷனர் ரகுநந்தனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.