ஆந்திரா : திருமலையை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டுமென்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திராவில் உள்ள திருமலை திருப்பதி கோயிலின் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி. ஆர். நாயுடு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவுக்கு நேற்று (1ம் தேதி) கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அதில், “திருப்பதி கோயிலின் புனிதத்தன்மை, பாதுகாப்பு மற்றும் பக்தர்கள் உணர்வுகளை கருத்தில்கொண்டு, திருமலையை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்பதுதான் பக்தர்கள் மத்தியில் தற்பொழுது எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.