தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பல வேலைகளை எளிமையாக்கியுள்ள நிலையில், மனிதர்கள் செய்யும் பணிகளை செயற்கை நுண்ணறிவு கருவியான ChatGPT தற்போது செய்கிறது. சமீபத்தில், பெங்களூருவைச் சேர்ந்த கேபிடல் மைண்ட் நிறுவனத்தின் நிறுவனர் தீபக் ஷெனாய் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர், ChatGPT-ஐப் பயன்படுத்தி தனது முழங்கால் பிரச்சனை தொடர்பான MRI ஸ்கேன் ரிப்போர்ட்டை பகுப்பாய்வு செய்துள்ளார். சாட்ஜிபிடி அதில், முழங்காலில் லேசான மூட்டு விலகல் இருந்ததை கண்டறிந்தது மற்றும் விளையாட்டு காயமாக இருக்கலாம் என்றும், வேகமாக அமரக்கூடாது என்றும் ஆலோசனைகள் வழங்கியது.
அதன் பின்னர், ஷெனாய் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெறுவதாக குறிப்பிட்டார். இதற்கு பிறகு, இணையதள வாசிகள் தங்கள் கருத்துகளை பகிர்ந்தனர், இதில் ஒருவர், “எனது அல்ட்ரா சோனிக் ரிப்போர்ட்டின்படி, ChatGPT எனக்கு செய்ய வேண்டிய விஷயங்களின் பட்டியலைக் கொடுத்தது,” என பகிர்ந்தார்.
ஆனால் சிலர், ChatGPT அல்லது கூகுளின் மூலம் சுயமாக சிகிச்சை பெறுவதைப் பற்றி எச்சரிக்கை விடுத்தனர், “உங்கள் ஆரோக்கியத்தை நிர்வகிக்க மருத்துவ நிபுணர்களை நம்புங்கள்” என்ற கருத்துகளும் வருகின்றன.