உதய்ப்பூர்: முன்னாள் மத்திய அமைச்சர் கிரிஜா வியாஸ் காலமானார். இன்று இறுதிச் சடங்குகள் நடக்கின்றன.
காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கிரிஜா வியாஸ் (79) காலமானார். மார்ச் 31-ல் நடந்த ஆரத்தி நிகழ்வில் அவரது துப்பட்டாவில் தீப்பற்றியது. அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவருடைய இறுதிச்சடங்கு இன்று உதய்பூரில் நடைபெறவுள்ளது. இவரது மறைவுக்கு காங்., தலைவர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.