புதுடில்லி: விரிவுப்படுத்தப்படும் என்று தகவல்… சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதி செய்யும் திட்டம் நாடு முழுவதும் இந்தாண்டு மார்ச் மாதத்திற்குள் விரிவுபடுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்,
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டம் சண்டிகரில் கடந்த ஆண்டு மாா்ச்சில் தொடங்கப்பட்டது. பின்னா், அத்திட்டம் 6 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
விபத்து நடந்த 24 மணி நேரத்திற்குள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் இந்த வசதி அமலுக்கு வரும்.
இந்த திட்டத்தின் கீழ் விபத்துக்குப் பிறகு முதல் ஏழு நாட்களுக்கு ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை அளிக்கப்படும்.
2024 ஆம் ஆண்டு சாலை விபத்துக்களில் 1.8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 30,000 பேர் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்துள்ளனர்.சாலை விபத்தில் மரணித்தவர்களில் 66% பேர் 18-34 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.